Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
0
4.01k
வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்
அறிமுகம்
வரலாற்றைக் கற்பதற்கு மூலாதாரங்கள் இன்றியமையாதன. இறந்த காலத்தைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் பல்வேறு வகைப்படும். இவ்வலகின் மூலம் மூலாதாரங்களை இனங்காணல், மூலாதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கட்டியெழுப்பும் முறை, வரலாற்றைக் கற்பதனால் பெறத்தக்க பயன்கள் என்பன பற்றி நீங்கள் கற்கலாம்.
1.1. மூலாதாரங்களை வகைப்படுத்தல்
வரலாறு என்பது இறந்த காலத்தில் வாழ்ந்த மனித செயற்பாடுகள் பற்றிக் கற்கும் பாடமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரான வரலாற்றைக் கற்கும்போது அக்காலகட்டங்களில் அவர்கள் எழுதி வைத்த விடயங்களும் அவர்களின் பல்வேறு ஆக்கங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அந்த எழுத்தாவணங்கள் அல்லது ஆக்கங்கள் மூலம் முற்கால மனித செயற்பாடுகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதனால் அவை மூலாதாரங்கள் எனப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரியதாகக் கிடைக்கப்பெறும் இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் அக்காலச் சமூகச் சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறான மூலாதாரங்களின் மூலம் பெற்றுக்கொள்ளும் தகவல்களைத்தர்க்க ரீதியாகக் கற்கும்போது அவ்வக் காலப் பகுதிக்கான மனித வாழ்க்கை பற்றிய வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது.
வரலாற்றை கற்கும்போது தகவல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மூலாதாரங்கள் அதிகளவில் காணப்பட்ட போதிலும் அவற்றை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. இலக்கிய மூலாதாரங்கள்
2. தொல்பொருள் மூலாதாரங்கள்
பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதன் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வைத்த நூல்களும்அறிக்கைகளும் இலக்கிய மூலாதாரங்களாகும். அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்படும் தொல்பொருள்கள், சிலைகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சிதைவுகள் என்பன தொல்பொருள் மூலாதாரங்களாகும்.
1. இலக்கிய மூலாதாரங்கள்
இலங்கை வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களை உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள், வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறு இலங்கையரால் எழுதப்பட்ட நூல்கள் தவிர இந்த நாட்டைப் பற்றி அக்கறை செலுத்திய வெளிநாட்டவர்களாலும் சில நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்கள் எழுதிய நூல்களில் இலங்கை பற்றிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நூல்கள் வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன.
உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்
இலங்கையின் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களுள் மிகப் பழைமையான நூல் தீபவம்சம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகும்.மகாசேன மன்னனின் ஆட்சிக் கால முடிவு வரை இந்நாட்டின் வரலாற்றுத் தகவல்கள் மற்றும் பௌத்த சமயம் தொடர்பான தகவல்கள் இந்நூலில் அடங்குகின்றன. ஆயினும், சில வரலாற்றுச் செய்திகள் தீபவம்சத்தில் மிகச் சுருக்கமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. சில விடயங்கள் உள்ளடக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. எனவே, தீபவம்சத்தில் இருக்கின்ற குறைபாடுகளை விடக் குறைபாடுகள் குறைவானதாக மகாவம்சம் எழுதப்பட்டுள்ளது.
மகாவம்சம் என்பது சில பாகங்களை உள்ளடக்கிய நூலாகும். அதன் முதல் பாகம் அநுராதபுர “திக்சந்த செனவியாபிரிவெனா" வில் வசித்த மகாநாமதேரர் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. தீபவம்சத்தைப் போலவே மகாவம்சத்திலும் புத்த பெருமானின் இலங்கை வருகை முதல் மகாசேன மன்னனின் ஆட்சி முடிவு வரை இடம்பெற்ற வரலாற்றுத் தகவல்கள் முதல் பாகத்தில் அடங்கும். அது கி. பி. 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டு அளவிலே எழுதப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் முதலாம் பாகமும் தீபவம்சத்தின் சில அத்தியாயங்களும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. ஏனெனில், இவ்விரு நூல்களும் எழுதப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்த சிஹல அட்டகதா, உத்தர விஹார அட்டகதா, வினய அட்டகதா முதலிய நூல்களின் தாக்கம் இவற்றில் செல்வாக்குச் செலுத்தி இருக்கலாம்.
மகாநாமதேரர் அவர்களினால் மகாவம்சத்தின் முதலாம் பாகம் எழுதப்பட்ட பின்னர் வேறு எழுத்தாளர்களினால் அவ்வக் காலப் பகுதிக்குரிய தகவல்களை உள்ளடக்கியதாக இன்னும் பல பாகங்களைக் கொண்ட தொடரிலக்கியமாக அது அமைந்துள்ளது. எனவே, மகாவம்சத்தில் இலங்கை வரலாறு இலக்கியவகை தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். ஒரு நாட்டின் வரலாறு ஒரே நூலில் அடங்கியுள்ள நாடுகள் உலகில் மிகச்சிலவாகும். அந்தவகையில் எமது நாட்டின் வரலாறு ஒரே நூலில் உள்ளடங்கி இருப்பது நாம் பெருமைப்படத்தக்க விடயமாகும்.
மகாவம்சத்தில் அடங்கியுள்ள செய்திகள் சில கல்வெட்டுகள் மூலமும் வேறு ஆவணங்கள் மூலமும் உறுதிப்படுத்தப்படுவதனால் மகாவம்சம் நம்பத் தகுந்த மூலாதாரமாகத் திகழ்கின்றது.
மகாவம்சத்தின் முதலாம் பாகம் எழுதப்பட்ட நான்கு நூற்றாண்டுகளின் பின்னர் பாளி மொழியில் எழுதப்பட்ட நூலின் சில பகுதிகளுக்கு மேலும் புராதன விளக்கமளிக்கும் வகையில் “டீகாவ” என்னும் உரை நூல் எழுதப்பட்டது. மகாவம்ச டீகாவ எனப்படும் இந்நூலுக்கு வம்சத்தப்பகாசினி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேறு மூலாதாரங்களில் கிடைக்கப்பெறாத பல்வேறு விடயங்கள் இந்நூலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் அநுராதபுரக் காலம் முதல் கண்டி இராசதானிக் காலம் வரையில் உள்நாட்டு இலக்கிய மூலாதாரமாகக் கருதத்தக்க மேலும் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பௌத்த சமய நூல்களாகக் கருதத்தக்க போதிவம்சம், தூபவம்சம், தாதுவம்சம், பூஜாவலிய, சத்தர்மாலங்கார முதலிய நூல்கள் இராசரட்டைக் கால வரலாற்றை அறிவதற்கு உதவுகின்றன. இலங்கையின் புத்த சாசன வளர்ச்சி பற்றி எழுதப்பட்டுள்ள நிகாய சங்கிரஹய, அரசியல் தகவல்களை அடக்கியுள்ள ராஜாவலிய என்பன கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியின் வரலாற்றைக் கற்பதற்கு உகந்த முக்கிய மூலாதாரங்களாகும். கோட்டை இராசதானி முதல் கண்டி இராசதானி வரையிலான காலப்பகுதி பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்குத் தூது காவியங்கள், புகழ் காவியங்கள், போர்க் காவியங்கள் என்பன பெரிதும் துணைபுரிகின்றன.
தூது காவியம் - மயுர சந்தேசய,திசர சந்தேசய,செலலிகினி சந்தேசய
புகழ் காவியம் - பெரகும்பா சிரித்த
போர்க் காவியம் - சீதாவாக்க சட்டன, இங்கிலிசு சட்டன, கொன்ஸ்தந்தினு சட்டன
உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவையாக அமைவதுடன் அந்நூல்கள் எழுதப்படுவதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள காரணங்களும் பல்வேறுபட்டனவாகும். அநுராதபுரக் காலம் முதல் கோட்டை இராசதானி ஆரம்பம் வரையிலான காலப்பகுதியில் எழுதப்பட்ட அதிகமான நூல்கள் சமய நோக்கோடு எழுதப்பட்டவையாகும். சில நூல்களில் குறிப்பிடப்படும் வரலாறு அது நிகழ்ந்து பல நூற்றாண்டுகளின் பின்னரே எழுதப்பட்டுள்ளன. எனவே, வரலாற்றை அறிந்து கொள்வதற்காக இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
1. நூல் எழுதப்பட்ட காலம்
2.நூல் ஆசிரியர்
3.நூல் ஆசிரியரின் நோக்கம்
4. நூலுக்கான தகவல் திரட்டப்பட்ட விதம்
எனவே, இலக்கிய மூலாதாரங்களைப் பயன்படுத்தும்போது தர்க்க ரீதியான சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்
அநுராதபுரத்தின் ஆரம்ப காலம் முதல் இலங்கை வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியமையால் இந்து சமுத்திரத்தில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை பற்றி அறிந்திருந்தனர். எனவே, கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டவர்களால் எழுதப்பட்ட நூல்களில் இலங்கை பற்றிய சில குறிப்புகள் அடங்கியுள்ளன.
சீன இலக்கியம் - பாகியன் தேரரின் தேச சஞ்சார அறிக்கை (பௌத்த இராச்சியம் பற்றிய விபரம்)
அறபு இலக்கியம்- இபின் பதுதாவின் தேச சஞ்சார அறிக்கை
போர்த்துக்கேய இலக்கியம் -ரிபைரோ என்பவரின் இலங்கை பற்றிய நூல் (ரிபைரோவின் இலங்கை வரலாறு)
ஓல்லாந்து இலக்கியம் - பிலிப்ஸ் பல்டியஸ் என்பவரின் இலங்கை பற்றிய நூல் (பல்டியசின் இலங்கை வரலாறு)
ஆங்கில இலக்கியம் - ரொபட் நொக்ஸ் அவர்களின் நூல் ( எதா ஹெலதீவு -அன்றைய இலங்கை)
நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, இலங்கை, இந்தியாவிற்கிடையில் நல்லுறவு நிலவி வந்தது. எனவே இந்தியாவின் சில நூல்களில் இலங்கை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளன.
தென்னிந்தியாவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய தமிழ் இலக்கியங்களில் கூட இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த கி.பி.16ஆம் நூற்றாண்டின் பின்னர் இலங்கை பற்றிய நூல்களை எழுதுவதிலும் வெளிநாட்டு நூலாசிரியர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள நூல்களை அவதானிக்கும்போது இலங்கைக்கு வருகை தராது, பிற நபர்களிடமிருந்து தகவல் பெற்று எழுதியுள்ள வேறு நூலாசிரியர்களைப் போலவே, இங்கு வருகை தந்து தகவலறிந்து எழுதியுள்ள நூலாசிரியர்களும் காணப்படுகின்றனர். இலங்கைக்கு வருகை தந்தும் தேச சஞ்சாரிகளிடமிருந்து தகவலறிந்தும் வெளிநாட்டு நூலாசிரியர்கள் தமது இலங்கையைப் பற்றி எழுதியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தராது, இலங்கைக்கு வருகை தந்தவர்களிடம் கேட்டறிந்து எழுதிய எழுத்தாளர்களும் அவர்களது நூல்களும்,
கிரேக்க மூலாதாரங்கள் - அரிஸ்டோட்டிலின் டிமுன்டோ, மெகஸ்தனிஸின் இண்டிகா, ஒனெசி கிரிட்ட சின் அறிக்கை
உரோம் மூலாதாரங்கள் - பிளினியின் நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா, தொலமியின் பூகோள சாஸ்திரப் பிரவேசம், தொலமியின் இலங்கைப்படம்
போர்த்துக்கேய மூலாதாரங்கள் - அருட்தந்தை பர்னாவோ டீகுவேரோஸ் அவர்களின் இலங்கை பற்றிய அறிக்கை
சீன மூலாதாரங்கள் - ஹியுங்சாங் பிக்குவின் தேச சஞ்சார அறிக்கை
இலக்கிய மூலாதாரங்களின் பயன்கள்
1. வரலாற்றுக் காலங்களை ஒழுங்கு முறைப்படுத்த முடியும்.
2. வெவ்வேறு காலகட்டங்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
3. ஒரு நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை இன்னொரு நூலின் மூலம் உறுதிப்படுத்த உதவும்.
4. ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும். (குறிப்பாக வெளிநாட்டு இலக்கிய நூல்கள்)
2. தொல்பொருள் மூலாதாரங்கள்
தொல்பொருள் மூலாதாரங்களை எழுத்தாவணங்கள், நாணயங்கள், சிதைவுகள், சித்திரங்கள், சிற்பங்கள், செதுக்கல்கள்,தொல்பொருள்கள் என வகைப்படுத்தலாம்.
சாசனங்கள் (எழுத்தாவணங்கள்)
சாசனங்கள் என்னும்போது கருங்கல், களிமண்தட்டு, சுவர், செப்புத் தகடு, பொன் தகடு, மரப்பலகை என்பவற்றில் எழுதிவைக்கப்பட்டுள்ளவற்றைக் குறிப்பிடுவதாகும். கருங்கல்லில் எழுதிவைக்கப்பட்டுள்ள ஆவணம் கல்வெட்டு எனப்படும்.
கல்வெட்டுக்கள்
கல்வெட்டு எழுதப்பட்டுள்ள கல்லின் அமைப்பைப் பொறுத்து அது குகைக் கல்வெட்டு, குன்றுக் கல்வெட்டு, தூண் கல்வெட்டு, சுவர்க் கல்வெட்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புராதன கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டவையாகும். கற்குகைகளைப் பௌத்த பிக்குமாரின் வசிப்பிடங்களாக வசதிசெய்து கையளித்தமை பற்றி அவை கூறுகின்றன. அமைத்தவர்களைப் பற்றிய சிறு விபரங்கள் அதாவது அவர்களின் பதவி, பரம்பரை என்பன அவற்றில் அடங்கும். புரதான சமூக வரலாறு, குடியேற்றங்களின் பரம்பல் என்பவற்றை அறிவதற்கு இக்கல்வெட்டுகள் உதவும்.
எழுத்தாவணம் எழுதப்பட்டுள்ள சாதனங்கள்
கல்வெட்டு - நிஸ்ஸங்கமல்லனின் கல்பொத்த (கற்புத்தகம்)
சுவர் - சீகிரி கிறுக்கல் கவிதைகள்
செப்புத் தகடு - முதலாம் விஜயபாகு மன்னின் பனாகடுவ செப்பு சாசனம்
பொன் தகடு (பொற் சாசனம்) - வல்லிபுரம் பொற்சாசனம்
மரப்பலகை - அம்பக்கை தேவாலய மரத்தூண்களில் எழுதப் பட்டுள்ள எழுத்துக்கள்
களிமண் பொருள்கள் - செங்கல், ஓடு என்பவற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்
பாத்திரங்கள் - மட்பாண்டம் மற்றும் பாத்திரங்களில் எழுதப்பட் டுள்ள எழுத்துக்கள்
எழுதப்பட்டுள்ள இடத்தின் இயல்பிற்கேற்ப கல்வெட்டுக்களை வகைப்படுத்தல்
குகைக் கல்வெட்டு - கற்குகைகளில் பீலிகளின் அருகில் எழுதப்பட்டவை
பாறைக் கல்வெட்டு - கற்பாறைகளின் மேல் எழுதப்பட்டவை
தூண் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கருங்கல் தூண்களில் எழுதப்பட்டவை
சுவர்க் கல்வெட்டு - செப்பனிடப்பட்ட கற்பலகையில் எழுதப்பட்டவை.
இருக்கைக் கல்வெட்டு - மலர் ஆசனங்கள் போன்ற கற்பலகையில் எழுதப்பட்டவை
கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கண்டி இராச்சியக் காலம் வரை இலங்கையில் கல்வெட்டுகள் தொடர்ந்தும் எழுதப்பட்டுள்ளன. கி.பி 2 ஆம் நூற்றாண்டின் பின்னர் அவை விகாரைகளுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள், காணிகள் பற்றியும் விகாரைகளின் நிர்வாகம் பற்றியும் அரச கட்டளைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையிலும் வர்த்தக நடவடிக்கை மற்றும் வரி அறவீடு பற்றியும் தவறு செய்தோருக்கு மன்னிப்பு அளித்தல் பற்றியும் தனி நபர்களின் சேவைகளைப் பாராட்டுதல் பற்றியும் வேறு விடயங்கள் பற்றிய தகவல்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
End of preview. Expand in Data Studio

No dataset card yet

Downloads last month
81